அஸ்ஸலாமு அலைக்கும்
அன்பார்ந்த பெற்றோர்கள் மற்றும் மாணவர்களுக்கு ,
” விருதுகள் வெற்றிக்கு வித்தாகும் “
இன்று (30.7.24)இஸ்லாமி பைத்துல்மால் தர்ம அறக்கட்டளையின் மூலமாக XII ஆம் வகுப்பில் கீழக்கரை அளவில் முதலிடம் பிடித்த தனியார் / அரசு / CBSE மெட்ரிக் பள்ளிகள் மற்றும் மாணவர்களை கௌரவப்படுத்தும் விழா நடைபெற்றது. இதில் நம் பள்ளி 12 ஆம் வகுப்பு மாணவி M.பஸ்லின் நுஹா கீழக்கரை அளவில் முதலிடம் பிடித்து நம் பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளார்.மேலும் நமது பள்ளி 12 ஆம் வகுப்பில் கீழக்கரை அளவில் முதலிடம் பிடித்த பள்ளி என்ற பெருமைக்கு உரித்தான பள்ளி என்பதை பெருமிதத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வெற்றிக்கு உறுதுணையாக இருந்த பள்ளித் தாளாளர், முதல்வர், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோருக்கு எம்பள்ளியின் சார்பாக மனமார்ந்த வாழ்த்துக்கள் மற்றும் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
வெற்றியை நோக்கி எம் பள்ளியின் பயணம் தொடரும்…