MUHYIDDHEENIYA MATRICULATION HIGHER SECONDARY SCHOOL

Guidelines to Parents:

  1. Parents who seek information must get it from the principal and those who wish to make any complaint can do so with the principal.
  2. They must inform the school if there is a change of address.
  3. They are advised to visit school from time to time to check their (Son / Daughter) wards’ progress in the school.
  4. Do not give unhealthy materials and dangerous objects to school.
  5. They are requested to take due note of the monthly progress report of their wards.
  6. Parents should ask their wards for their monthly or termly progress report sent by the school between the 1st and 4th of every month. They should sign the report and return it within two days.
  7. The principal will distribute the progress cards among the students in person. A fine will be imposed on the students who neglect to collect their progress cards.
  8. Discipline progress report cards are seldom issued. Students are responsible for the safety of the cards. A fine of Rs.100/- is imposed if they need a duplicate card.

பெற்றோர்கள் கவனத்திற்கு:

1. காலை Silent Hour மற்றும் வழிபாட்டுக் கூட்டத்தில் தங்கள் குழந்தைகள் தவறாது கலந்து கொள்ள வேண்டும்.

2. தினந்தோறும் குழந்தைகளின் நாட்குறிப்பேட்டைத் தவறாமல் பார்த்துக் கையொப்பமிட வேண்டும். 3. குழந்தைகள் பள்ளிக்கு தினந்தோறும் வருவதை உறுதி செய்ய வேண்டும்.

4. வீட்டுப் பாடங்களைச் சரிவர செய்ய குழந்தைகளுக்கு உதவிட வேண்டும்.

5. குழந்தைகள் சரியான நேரத்தில் பள்ளிக்கு வருவதற்கு பெற்றோர்கள் ஏற்பாடு செய்ய வேண்டும்.

6. பள்ளிக்கு உரிய நேரத்தில் குழந்தைகள் வரவேண்டும் (காலை 9.00 மணிக்கு முன்பும் மதியம் 145 மணிக்கு முன்பும் வர வேண்டும்)

7. பள்ளிக்கு நாள்தோறும் தங்கள் குழந்தைகள் சீருடையில் மட்டும்தான் வர வேண்டும் Shoe, Socks, ID-Card, Tie, Belt கண்டிப்பாக அணிய வேண்டும்.

8. பள்ளியின் உடைமைகளை பாதுகாத்தி, அறிவுறுத்த வேண்டும். பள்ளியின் உடைமைகளுக்கு ஏதேனும் சேதத்தை தங்கள் குழந்தைகள் ஏற்படுத்தினால் அதற்கு தாங்களே பொறுப்பு.

 9. தங்கள் குழந்தைகள் பள்ளி தேர்வு நாட்களில் விடுப்பு எடுப்பதை தவிர்க்க வேண்டும். தவிர்க்க இயலாத காரணத்தால் விடுப்பு எடுக்க நேர்டின் விடுப்புக் கடிதம் கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டும். ஒரு வாரத்திற்கு மேல் விடுப்பு எடுக்க நேரிடின் மருத்துவச் சான்றிதழ் (Medical Certificate) கண்டிப்பாகத் தரவேண்டும்.

10. பள்ளி முதல்வரின் அனுமதியின்றி பள்ளி வேலைநேரத்தில் பள்ளி வளாகத்தை விட்டு தங்கள் குழந்தைகளை வெளியே அழைத்துச் செல்லக்கூடாது

11.கைப்பேசி (Cell Phone) யை பள்ளிக்கு தங்கள் குழந்தைகள் கொண்டு வருவதை தவிர்த்தல் வேண்டும்.

12. பள்ளியில் நடைபெறும் பெற்றோர் ஆசிரியர் கூட்டத்திற்கு தாங்கள் தவறாது வருகை புரிய வேண்டும்.

13. தங்கள் குழந்தைகளின் கற்றல் திறனை அவ்வப்போது வகுப்பாசிரியரிடம் கலந்து ஆலோசிக்க வேண்டும்.

14. குழந்தைகள் நன்கு பயிலவும்,  ஒழுக்கத்தில் சிறந்து விளங்கவும் தாங்கள் உதவி செய்ய வேண்டும்.

15. பள்ளிக்கட்டணம் மற்றும் வாகனக் கட்டணத்தை தாமதமின்றி கட்ட வேண்டும். நீண்ட காலம் பள்ளிக்கட்டணம் மற்றும் வாகனக் கட்டணத்தை கட்டாதவர்கள் நிர்வாகம் எடுக்கும் முடிவுக்கு பொறுப்பேற்க வேண்டும்.

16. விலையுயர்ந்த பொருள்களையோ, தங்க ஆபரணங்களையோ பள்ளிக்கு தங்கள் பிள்ளைகள் அணிந்து வரக்கூடாது.

17. பள்ளியில் ஏற்படும் சேதங்களுக்கு தங்கள் மகன் / மகள் பொறுப்பேற்காத நிலையில் தவறுக்கு காரணமான மாணாக்கரின் அடையாளம் தெரிந்தால் தங்கள் குழந்தைகள் கூற வேண்டும். தவறு செய்த மாணாக்கரை கண்டு பிடிக்காத நிலையில் நிர்வாகம் கொடுக்கும் தண்டனைக்கு தங்கள் மகன் / மகள் உடன்பட வேண்டும்